2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டம்; தடுப்பதற்காக யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 26 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். 

இந்நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதக் கொண்டாட்டங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

பிரிதொரு குழுவொன்றினால் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினருடன் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் சாதாரண தினமாகவே காணப்படப்போகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவொரு கொண்டாட்டமும் இடம்பெறப்போவதில்லை என்று என்னால் உறுதி கூற முடியும் என்றும் யாழ். கட்டளைத்தளபதி தெரிவித்தார். 

யாழ்ப்பாண நகரின் பல வீதிகளிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளைகளிலும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர் என்று மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டார். 


  Comments - 0

  • ilakijan Saturday, 26 November 2011 10:45 PM

    ஆயிரம் கை கொண்டு தடுத்தாலும் ஆதவன் மறைவைதில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X