Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 நவம்பர் 26 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். தீவுப்பகுதியான அனலதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டிலிருந்து மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரி.இந்திரன் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து இராணுவத்தினரோடு இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த நபரின் வீட்டிலிருந்து இரண்டு கிரனேட்கள், துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
குறித்த நபர் ஏற்கனவே கடத்தல் ஒன்றுடன் தொடர்புபட்டவர் எனவும் அண்மையில் தான் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர் எனவும் மேலும் தெரியவருகிறது. இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago