2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

உடற்கல்வி டிப்ளோமா கற்கையை பட்டப்படிப்பாக தரமுயர்த்த கோரிக்கை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 08 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியை பட்டப்படிப்பாக தரமுயர்த்துமாறு கோரி உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் இன்று வியாழக்கிழமை  புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியை தரமுயர்த்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பல தடவைகள் கோரியுள்ளோம். இருப்பினும் யாழ். பல்கலைக்கழகம் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பவானந்தனிடம் கேட்டபோது, 

யாழ். பல்கலைக்கழகத்தில் 1998ஆம் ஆண்டு ஆரம்பமான இக்கற்கைநெறியானது 2 வருடங்களாக அங்கீகாரமற்றதொரு கற்கைநெறியாக மேற்கொள்ளப்படுகின்றது. இக்கற்கைநெறியைத் தொடரும் மாணவர்கள் தங்கள் கற்கைநெறிக்கான நிரந்த விரிவுரையாளர்களையும் தமது கற்கைநெறியை பட்டப்படிப்பாக தரமுயர்த்துமாறு கோரி தற்போது புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறிக்கான மாணவர்களின் கோரிக்கை தொடர்பில் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருடன் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் கலந்துரையாடலை மேற்கொண்டு இதற்குரிய தீர்வைப்பெற்றுக்கொள்ள மாணவர் ஒன்றியம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .