2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபரை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

அனுபவம் வாய்ந்த அதிபரை நியமிக்க கோரி உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பெற்றோர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வடமாராட்சி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் புஸ்பலிங்கம் தெரிவித்தார்.

வட மாகாண கல்வி அமைச்சினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வகுப்பு ஐஐ தகுதியுடைய கௌரி சேதுராஜாவினை மாற்றிவிட்டு தகுதிவாய்ந்ததுடன் அனுவபமிக்க அதிபரை நியமிக்க கோரி சுமார் 100 பெற்றோர்கள் பாடசாலை முன்பாக ஒன்று கூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அதிபர் சேவையில் தெரிவு செய்யப்பட்டுள்ள கௌரி சேதுராஜா நாளை வியாழக்கிழமை உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையிலேயே இந்ந பாடசாலையின் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இதேவேளை, இந்த கல்லூரியின் பழைய அதிபர் எல்.என்.ஜோசப் கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை ஓய்வுபெற்று சென்றுள்ளார். இந்த நிலையில், நாளை அதிபர் பதவியை ஏற்கவுள்ள கௌரி சேதுராஜா பெற்றோர்களின் குழப்ப நிலையினால் அதிபர் பதவியினை ஒரு வார காலத்தின் பின்பு பதவியேற்க அறிவுறித்தியுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .