2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

அப்துல்கலாமை போல் கனவு காணுங்கள்: இந்திய துணை தூதுவர்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். உயர் தொழில் நுட்ப நிறுவனத்தின் பரிசளிப்பு விழா நிகழ்வு குருநகர் தொழில் நுட்ப நிறுவனத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் வே.முகாலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசினை வழங்கி வைத்தார்.

இதன்போது, பிரதம விருந்தினர் உரையாற்றும் போது, கல்வி கற்றும் மாணவர்கள் ஒவ்வொருவரும் அப்துல் கலாமைப் போல் கனவு கான வேண்டும். பரீட்சையில் தோற்றுவிட்டோம் என்று துவண்டு போகாமல் மீண்டும் வெற்றிக்காக படிக்க வேண்டும்.

எதிர்காலத்தின் கனவைப்பற்றி சிந்தித்து கொண்டு இருக்க வேண்டும். கனவுகாணும் போது அந்த கனவாகவே நாம் மாறும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படும். மனதை தளர விடாது முயற்சியுடன், வெற்றியை நோக்கிய கனவை காணுங்கள் என்றார்.

இந்நிகழ்வில், இலங்கை தொழில் நுட்ப கல்வி நிறுவன பணிப்பாளர் கபில சி.கே.பெரேரா, மற்றும் தூதரக அதிகாரி சுரேஷ் கே.மேனன், உட்பட். லயன்ஸ் பி.பார்த்திபன், தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .