2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

யாழ். தனியார் பஸ் சேவை வழமைக்கு திரும்பியது

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

கைகலப்பில் ஈடுபட்ட பஸ் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்ததை தொடர்ந்து தனியார் பஸ் சேவைகள் இன்று 3 மணியுடன் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணைய தலைவர் பொ.கெங்காதரன் தெரிவித்தார்.

அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை தனியார் பஸ்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இன்று காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டார்கள்.
 
இவ்விடயம் குறித்து யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது, நேரக்கணிப்பாளர்களினால் கணிக்கப்பட்ட நேரத்தினைவிட பஸ்களை முந்திச் செல்லும் பஸ் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், அவர்களுக்கு 1500 ரூபா தண்டப்பணம் அறவிடப்டுமென்றும் அரச அதிபர் கூறியுள்ளார்.

அதேவேளை, கைகலப்பில் ஈடுபடும் பஸ் சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தான் அறிவிப்பதாகவும் அரச அதிபர் கூறியுள்ளதாகவும், அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பினை இடைநிறுத்தியுள்ளதாகவும், 3 மணியுடன் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .