2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக ஆமை பிடித்த குற்றச்சாட்டில் மீனவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 03 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(சுமித்தி)


கடலில் சட்டவிரோதமாக ஆமை பிடித்ததாகக் கூறப்படும் மீனவரொருவர் பிடிக்கப்பட்ட ஆமையுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக கடலில் ஆமை பிடித்ததாகக் கூறப்படும் இம்மீனவர் பிடிக்கப்பட்ட ஆமையுடன் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

இம்மீனவர் பூநகரி கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை காலை கலங்கட்டி வலை மூலம் 15 கிலோ நிறையுடைய ஆமை பிடித்ததாகக் கூறி கடற்படையினர் இவரைக் கைதுசெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிடிக்கப்பட்ட ஆமையுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் கூறினார்.


  Comments - 0

  • ibnuaboo Thursday, 03 January 2013 09:20 AM

    இந்திய மீனவர்கள் எமது கடலில் உள்ள மீன்களையெல்லாம் பிடித்து சென்றால் எமது மீனவர்கள் வலையில் ஆமை தானேபடும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .