2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சரவணபவன் எம்.பி.க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும்: ஹத்துருசிங்க

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவனனுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இன்று தெரிவித்தார்.

யாழ். பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'யாழ். தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீதான தாக்குதலுக்கு ஹத்துருசிங்க பொறுப்பேற்ற வேண்டுமென்று நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபன் தெரிவித்த கருத்தொன்று உதயன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றங்கள் அனைத்திற்கும் இராணுவத்தின் மீது பழி சுமத்த வேண்டாம். சட்டத்தினையும், ஒழுங்கையும், சீர்குலையாமல் பாதுகாப்பதே எனது கடமை. அவற்றினை தான் நான் செய்து கொண்டிருக்கின்றேன். உங்களுக்கும் குடும்பம் இருக்கின்றது. அவற்றினை சிந்தித்து பத்திரிகையில் செய்திகளை பிரசுரிக்க வேண்டும்.

உண்மைகளை மட்டும் பத்திரிகையில் பிரசுரியுங்கள். அவற்றினை விட்டு தவறான தகவல்களை பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டாம். யாழ். மாவட்டத்தில் எத்தனையோ பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

எத்தனை பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதை வெளியிடுங்கள், சமூகத்தினை மேம்படுத்துவதற்கான செய்திகளை பிரசுரியுங்கள்.

இராணுவத்தினரைப் பற்றி தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். இவ்வாறு வெளியிடும் பத்திரிகை நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

  Comments - 0

  • aj Tuesday, 12 February 2013 07:01 AM

    அச்சுறுத்தல் எல்லா வழிகளிலும் தொடர்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--