2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கும் அனுமதி வழங்கும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை சிகரம் நிறுவனத்தில் இடம்பெற்றது.

கல்வி தொழில் வழிகாட்டல் சேவையினை பிரதானமாக வழங்கிவரும் சிகரம் நிறுவனம் தற்போது சர்வதேச பல்கலைக்கழகங்கள், முன்னணி கப்பல் நிறுவனங்களுடன் இணைந்து விரும்பிய நாட்டில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தொழிற்பயிற்சி கற்கைநெறிகளை வடக்கில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைவாக பயனாளிகளுக்கு இப்பயிற்சி தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், இந்தத் தொழிற் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவுஸ்திரேலியா, பிரிட்டன்,  நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு  விரும்பிய வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், பயிற்சிக் காலத்திலேயே மாதம் 50,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்த தொழில் பயிற்சிநெறிகளில் இணைந்துகொள்பவர்களுக்கு சிகரம் நிறுவனத்தால் 3 மாத கால இலவச ஆங்கிலப் பயிற்சிநெறியும் வழங்கப்படுகின்றது.

சிகரம் நிறுவனத்தினூடாக இந்தப் பயிற்சிநெறிகளில் இதுவரை நான்கு அணி மாணவர்கள் இணைந்துள்ளனர்.
தற்போது ஐந்தாம் அணிக்கு மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--