2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வடதாரகை கப்பலில் பொருத்துவதற்காக தொலைக்காட்சிப்பெட்டி அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். குறிகட்டுவான் பிரதேசத்திலிருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்கு சேவையில் ஈடுபட்டுவருகின்ற  வடதாரகை கப்பலில் பொருத்துவதற்கான தொலைக்காட்சிப் பெட்டியொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்ற பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த தொலைக்காட்சிப்பெட்டியை வடதாரகை கப்பல் ஓட்டுனரிடம் வழங்கிவைத்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவுக்கு விஜயத்தை மேற்கொண்டபோது,  தொலைக்காட்சிபெட்டியொன்று வழங்குமாறு வடதாரகை கப்பல் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கைக்கமைய வடதாரகை கப்பலில் பொருத்துவதற்கான தொலைக்காட்சிப்பெட்டியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிவைத்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--