2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

யாழ். மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பிணையில் விடுதலை

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷhந்தனை பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

யாழ். கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் கடந்த 10ஆம் திகதி  இரவு அத்துமீறி நுழைந்து வீட்டின் முன்;பாக நின்ற வான் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டதாகவும் அதேவேளை வானை தீ மூட்ட முயற்சித்ததாகவும், வீட்டின் உரிமையாளரினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதன் பிரகாரம் யாழ். பொலிஸாரினால்; கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். மேற்படி வழக்கினை இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார், ஐந்து லட்சம் பெறுமதியான இரண்டு ஆட் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--