2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

முல்லைத்தீவில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் மாயம்

Kogilavani   / 2013 ஜூலை 23 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கே.பிரசாத்

முல்லைத்தீவில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கோவில் குடியிருப்பைச் சேர்ந்த கந்தசாமி மணிவண்ணன் என்பவரே காணமல் போயுள்ளதாக உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொழிலுக்குச் சென்ற இவர் காணமல் போயுள்ளதாகவும் இவரின் படகு மற்றும், வலைகள் முல்லைத்தீவில் இருந்து 32 கடல்மையிலுக்கு அப்பால் மீட்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கடற்படையினரின் உதவியையும் நாடியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--