2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

எல்லை தாண்டிய மீன்பிடிக்கு எதிராக இந்தியாவுக்கு மகஜர்: டக்ளஸ்

Kanagaraj   / 2013 ஜூலை 23 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

எமது கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய மீன்பிடிப்பதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற வடமாகாண அபிவிருத்தி தொடாபான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்தியாவில் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

எனக்கெதிராக போராட்டம் இந்தியாவில் நடாத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதுவரிடம் கதைத்துள்ளளேன் இந்திய அமைச்சரையும் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அந்த முயற்சி கைகூடவில்லை.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடி மற்றும் தடைசெய்யப்பட்ட இலுவைப்படகுகளைப் எமது கடற்பரப்பில் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதோடு எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது.

இதனை உடனடியாக இந்திய அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என்று மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எமது மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தால் நீண்டகாலம் இந்திய சிறையில் தடுத்து வைக்கப்படுகின்றனர் இந்திய மீனவர்கள் எமது கடற்பிரதேசத்தில் எல்லை தாண்டி வந்தால் குறிய காலத்தில் விடுவிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0

  • குடிமகன் Tuesday, 23 July 2013 08:49 PM

    ஐயா நீங்கள் தனித்து போட்டியிட்டால் உங்களுக்கு எத்தனை ஆசனம் கிடைக்கும் என்று யாவரும் அறிந்த விடயம்... நீங்கள் உங்கள் பலத்தை இந்தமுறை நிரூபிங்கள் பார்க்கலாம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--