2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி நெறி ஆரம்பித்து வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 24 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


காரைநகர் பகுதி இளைஞர் யுவதிகளுக்கான கணினி, தச்சு, பொறியியல், துறைகளிற்கான தொழிற்பயிற்சிநெறி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வடமாகாண சபை மற்றும், வடமாகாண செஞ்சிலுவை சங்கம், தொழில்துறை திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த தொழிற் பயிற்சி நெறியினை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி காரைநகர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

தொழிற்துறை திணைக்களத்தில் 740 இளைஞர்கள் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பித்த நிலையில், 149 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

149 பேருக்கும் 6 மாத பயிற்சியுடன், 10 ஆயிரம் ரூபா வேதனமும் வழங்கப்படவுள்ளன.

இப்பயிற்சி காலத்தில் வழங்கப்படவுள்ள வேதனத்தில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அன்பளிப்பாக 7 ஆயிரம் ரூபாவும், வடமாகாண சபை 3 ஆயிரம் ரூபாவுடன், 10 ஆயிரம் ரூபா மாதாந்த வேதனம் வழங்கப்படவுள்ளது.

பயிற்சி நெறி முடிவில் தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபையினால் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில், வடமாகாண பிரதம செயலாளர் ரமேஷ் விஜயலக்சுமி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண செஞ்சிலுவை சங்க தலைவர் மடுகல, செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட தலைவர் கே. பாலகிருஷ்ணன், உட்பட காரைநகர் பிரதேச செயலர் மற்றும் இளைஞர்கள், யுவதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X