2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

யாழில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

Kanagaraj   / 2013 ஜூலை 28 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


சுதந்திரக்கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் மேற்கொண்ட மறியல் போராட்டத்தின் போது இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு விண்ணப்பித்த எம்.எம்.சீராஸ் என்பவர் வேட்பாளர் பட்டியிலில் இடம்பெறாததையடுத்தே இந்த மறியல் போராட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இளைஞர் ஒருவர் 'சிராஸ் அண்ணனை வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளாவிட்டால் தீக்குளிப்பேன்' என்று சொல்லி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த மண்னெண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்ற முயற்பட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் தீக்குளிக்க முயற்சித்த இளைஞனிடம் இருந்து மண்ணெண்ணை கானை பறித்தெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனே இந்த மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளதுடன் போக்குவரத்துக்கு இடையூறு எற்படாமல்  முன்னெடுக்குமாறு பொலிஸார் தெரிவித்த போதும் குறித்த இளைஞன் பொருட்படுத்தாமல் பொலிஸாருடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி சமன்சிகேரா குறித்த இளைஞனைக் கைது செய்து சக பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சில இளைஞர்களின் எதிர்பை அடுத்து  பொலிஸார் அவ்விளைஞனை விடுவித்துள்ளனர்.


  Comments - 0

  • sudar Sunday, 28 July 2013 06:11 PM

    ஒரு தியாகிக்காக சீற்றுக்கேட்டாலும் பறவாயில்லை. அரசியலில் மக்களுக்கு யார் என்று தொரியாத ஆளுக்கு சீற் கிடைக்கவில்லை என்று இவ்வளவு பில்டப்பு. சீற்று தந்து பதவிக்கு அரசாங்கம் பதவி நீக்கினால் இப்படியானவா்கள் பஸ்சையே கொழுத்தக் கூடியவா்கள். வடக்கு மாகாணம் யுத்தத்தால் எரிஞ்சு போயிருக்கு கவனம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--