2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

எழிலனின் மனைவியும் போட்டி

Kanagaraj   / 2013 ஜூலை 28 , பி.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட  அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் கூட்மைப்பின் சார்பில் மூன்று பெண்கள் போட்டியிடவுள்ளனர்.

ஆவர்களில் இருவர்  தமிழரசுக்கட்சியின் சார்பிலும் மற்றவர்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பிலும்  போட்டியிடவுள்ளார்.

இதில் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலன் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.

36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 03 பெண்களும் உள்ளடங்குவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

  Comments - 0

  • AJ Monday, 29 July 2013 07:50 AM

    நல்ல விடையம். வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--