2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

அ.இ.மு.காவில் சீராஸ் போட்டி

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வடமாகாண சபைத் தேர்தலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எம்.எம். சீராஸ் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள வடாமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு சீராஸ் விண்ணப்பித்திருந்ததோடு பிரச்சாரப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

சுதந்திரக்கட்சின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் இருந்து இவர் நிராகரிக்கப்பட்டதையடுத்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக இவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்திலும் வீதி மறியலிலும் நேற்று ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த தேர்தலில் வடமாகாண சபையில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆசனமொன்றை ஒதுக்கியிருந்தது .

சுதந்திரக்கட்சியிலிருந்து நிராகரிக்கப்பட்ட எம்.எம் சீராஸ் இணைத்துக்கொள்ளப்பட்டு போட்டியிடவுள்ளதாகவும் கொழும்பில் வைத்து வேட்பு மனுவில் இவர் நேற்று திங்கட்கிழமை ஒப்பமிட்டுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

  Comments - 0

 • m iswardeen Tuesday, 30 July 2013 06:59 AM

  ஏன் இந்த வெறி......யாட்டம்...

  Reply : 0       0

  vaarisu. Tuesday, 30 July 2013 08:53 AM

  ஐயாமாரே... பிழைப்புக்கு ஆயிரம் வழிகள் உண்டு. தயவு செய்து ஓர் இனத்தை காட்டி கொடுத்து பிழைப்பு நடத்தாதீர்கள்...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X