2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

யாழ்.பல்கலையின் முன்னாள் துணைவேந்தருக்கு சர்வதேச விருது

Kogilavani   / 2013 ஜூலை 30 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ்.பல்கலைக்கழகத்தின்  முன்னாள் துணைவேந்தர் எஸ்.சண்முகலிங்கம் சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.மகாஜனாக் கல்லூரி மண்டபத்தில் வைத்து இந்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல்; 2011 ஆம் ஆண்டு வரை இவர் யாழ்.பல்கலைக்கழத்தில் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.

இக் காலப்பகுதியில்  இவர் செய்த கல்வி மற்றும் சமூக சேவைகளைக் கருத்திற்கொண்டு கனடா உதயன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாநில அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர், யுத்தம் நடைபெற்ற காலத்திற்குப் பின்னர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களை பல அச்சறுத்தலுக்கு மத்தயிலும் விடுவித்து அவர்கள் மீண்டும் தங்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகளைச் செய்யதார்.

அத்துடன கலை, சமயம் போன்ற பல்வேறு துறைகளிலும் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக போற்றப்பட்ட நிலையில் இவருக்கு இந்த இந்த சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--