2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நலன்புரி நிலையத்தில் உள்ளவர்களை கீரிமலையில் குடியேற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}-எஸ்.கே.பிரசாத்


வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் இருந்து  இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை கீரிமலை மாவிட்டபுரம் பிரதான வீதியின் மேற்குப் புறமாக குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

22 வருடங்களுக்கு மேலாக தங்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேறிய உயர் பாதுகாப்பு வலயமாக இன்னும் விடுவிக்கப்படாமல் நிலையில் உள்ள பிரதேசத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குறித்த பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர்.

நேற்று புதன்கிழமை அப்பகுதிச் சென்ற அமைச்சர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தைப் பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பில் பிரதேச செயலர் மற்றும் படைத்தப்பினருடனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பிட்ட சில காலங்களில் இப்பிரதேசம் நிலஅளவை செய்யப்பட்டு பொதுமக்களிற்கு கையளிக்கப்படவுள்ளது. இவ்வாறு குடியேற்றப்படும் மக்களின் பிரதான தொழிலாக கடற்தொழில் அமைந்துள்ளதால் குடியேற்றம் செய்யப்படும் பகுதிக்கு அண்மையில் அவர்கள் கடற்தொழில் செய்வதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று பிரதேச செயலரினால்  படைத்தரப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடற்படையினருடன் கலந்தாலோசித்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--