2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

புனர்வாழ்வளிக்கும் தொண்டர்களுக்கான பயிற்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன்


கிளிநொச்சியில் மாற்று வலுவுள்ளோருக்கு புனர்வாழ்வு வழங்கும் தொண்டர்களுக்கான செயலமர்வு உதயநகர் சோலைவனம் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனின் ஏற்பாட்டில் வலுவிழந்தோருக்கான சர்வதேச நிறுவனம், சமூக சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த செயலமர்வினை நடத்தினர்.

இச்செயலமர்வில் கரைச்சி, கண்டாவளை மற்றும் பூநகரி பிரதேசங்களைச் சேர்ந்த மாற்றுவலுவுள்ளோருக்கு புனர்வாழ்வளிக்கும் 20 தொண்டர்கள் தெரிவு செய்யப்பட்டு 4 நாட்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

பயிற்சிபெற்ற இவர்கள் மாற்றுவலுவுள்ளோருக்கான புனர்வாழ்வு தொடர்பான வேலைத்திட்டங்களை பிரதேச செயலர்களின் அனுசரணையுடன் மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை வலுவிழந்தோருக்கான சர்வதேச நிறுவனம் வழங்கவுள்ளதுடன், இதோபோன்று ஏற்கனவே 11 தொண்டர்களைப் பயிற்சியளித்து அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையையும் இந்த நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திற்கு இச்செயற்திட்டம் நன்மை பயக்குமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--