2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

டீசல் நிரப்புவர் மீது பஸ் சாரதி தாக்குதல்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கனகராஜ்

இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலையில் பேரூந்துகளுக்கு டீசல் நிரப்புபவர் பேரூந்து சாரதியால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பருத்தித்துறை சாலையில் வியாழக்கிழமை இரவு பேரூந்து ஒன்றுக்கு டீசல் நிரப்பியபோது, நிரப்பிய அளவினைவிட கூடிய கணக்கினை நிரப்புனர் பதிவில் பதிந்தார் எனக்கூறி குறித்த பேரூந்தின் சாரதி நிரப்புனருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி, பேரூந்து சாரதி டீசல் குழாயினால் நிரப்புவரின் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் காயமடைந்த டீசல் நிரப்புவரான ஜ.குகநந்தன் (வயது-50) என்பவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக பருத்தித்துறைச் சாலை முகாமையாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபொழுது, பேரூந்துக்கு டீசல் கணக்குப் பதிவதில் குளறுபடிகள் இடம்பெற்றமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு, உரியவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப்படவுள்ளதோடு, விசாரணை முடியும் வரையும் குறித்த சாரதியினை தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--