2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

யாழ். விபத்தில் வயோதிபர் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

தனியார் பஸ்ஸொன்றும் சைக்கிளும் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சைக்கிளில் பயணித்த வட்டுக்கோட்டை சங்கரத்தையினைச் சேர்ந்த சூசைப்பிள்ளை யாக்கூப் (வயது 56) என்பவரே பலியாகியுள்ளார்.

யாழ். பிரதான வீதி நீதிமன்றத்திற்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்.பிரதான வீதியின் ஊடாக யாழ்.நகரிற்கு வந்துகொண்டிருந்த பஸ் வண்டியொன்றும் எதிரே வந்த சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

படுகாயமடைந்த வயோதிபர்  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பயனளிக்காமல் அவர் இன்று மாலை உயிரிழந்தார். இது தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--