2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சுடுதண்ணீர் ஊற்றுண்டதில் சிறுமியும் குழந்தையும் காயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுடுதண்ணீர் ஊற்றுண்டதில் காயமடைந்த சிறுமி ஒருவரும் 10 மாதக் குழந்தை ஒன்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். தெல்லிப்பழை செல்வாபுரத்திலேயே நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (19) இச்சம்பவம் இடம்பெற்றது.

மேற்படி சிறுமி சுடுதண்ணீரை எடுத்துவந்தபோது, அவரது  கை நழுவி சுடுதண்ணீர் கீழே ஊற்றுண்டுள்ளது. இதன்போது மேற்படி சிறுமி மீதும் நிலத்தில் படுத்திருந்;த 10 மாதக் குழந்தை மீதும் சுடுதண்ணீர் பட்டுள்ளது.

இந்த நிலையில், காயமடைந்த சிறுமியும் குழந்தையும்  உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக  யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .