2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கான சுகாதார மேம்பாட்டு நிகழ்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கிருஸ்ணன்

யாழ்.தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலை மாணவர்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதற்கான 'பாடசாலை சுகாதார மேம்பாட்டு நிகழ்வுகள்' இன்று (21) நடைபெற்றது.

வடமாகாண கல்வி சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்து கல்லூரியில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றன.

தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கிருஷ;ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ராஜ ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மருத்துவ முகாம், சுகாதார மேம்பாட்டிற்கான கண்காட்சி, சுகாதார நலன் தொடர்பான கலைநிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .