2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் கைப்பை அபகரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். கோண்டாவில் மகா வித்தியாலய வீதியில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரின் கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் பறித்துச் சென்றுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (21) இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நல்லூர் பிரதேச சபையில் கடமை புரியும் மேற்படி பெண் ஊழியர் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோதே அவரது கைப்பை பறித்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தப் பெண்ணின் சைக்கிள் கூடையிலிருந்த கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பறித்துச் சென்றார்.

கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் ரூபாவும் 2 கையடக்கத் தொலைபேசிகளும் ஏனைய ஆவணங்களும் பறிபோயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் மேற்படி பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--