2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

நாவற்குழி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


யாழ். நாவற்குழியில் தமிழ் மக்களுக்கு காணிகள் வழங்கபடாததினைக் கண்டித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளனர்.

நாவற்குழியில் குடியேறியிருக்கும் சிங்கள மக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் காணிகள் அளந்து கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தும் அப்பகுதி தமிழ் மக்களுக்கு எவ்வித காணிகளும் இதுவரையிலும் அளந்து கொடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக கருத்துக்கூறிய நாவாற்குழி தமிழ் மக்கள்,

சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கிய பின்னர், தமிழ் மக்களுக்கு காணிகளை பிரித்து தருவதாக இராணுவம் உறுதியளித்திருந்த போதும் தற்போது சிங்கள மக்களுக்கு மட்டும் காணிகள் அளந்து கொடுத்து விட்டு தாங்களை புறக்கணித்துள்ளனர்.

நாங்கள் இப்பிரதேசங்களில் 4 வருடங்களாக வசித்து வருகின்றோம், எனினும் 6 மாதங்களுக்கு முன்னர் வந்த சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு, வீடுகள் அமைப்பதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் எவரேனும் எமக்கு எதுவித உதவியும் இதுவரையிலும் செய்திருக்கவில்லை.

இப்பிரதேசத்தில் 150 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கு காணி தருவதாக கூறி எங்கள் காணிகளைத் துப்பரவு செய்து காணி அளப்பதற்குரிய கட்டைகளை வெட்டி வைக்குமாறும் இராணுவத்தினர் கூறியிருந்தனர். இருந்தும் எமக்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் ஏமாற்றி வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொள்ளவுளளோம்' என அம்மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--