2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வியாபார நிலையத்தில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். கோப்பாய் பகுதியில் உள்ள கட்டிடப் பொருட்கள் வியாபார நிலையம் ஒன்றலிருந்து  5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருட்டுப் போயுள்ளன.

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்திலேயே பொருட்கள் திருட்டுப் போயுள்ளன.

மேற்படி வியாபார நிலையத்தின் உரிமையாளர் இன்று புதன்கிழமை  அதிகாலை 5 மணிக்கு வியாபார நிலையத்தை திறக்கவந்தபோது, வியாபார நிலையத்தின் முன்பக்க கதவினுடைய பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்படி வியாபார நிலையத்தின் பின்கதவு வழியாக அங்கிருந்த  மோட்டார்கள், இரும்புப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது. 

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0

  • Parathan Wednesday, 23 October 2013 09:18 AM

    அன்மைக்காலமாக யாழ். பருத்தித்துறை வீதியில் உள்ள பல்பொருள் நிலையங்கள் என்றுமில்லாதவாறு உடைத்து திருடப்பட்டு வருகின்றன. இப்படியான நிலைமை தொடர்ந்து சென்றால் இரவிலும் கடை உரிமையாளர்கள் வீடு செல்லாமல் காவல் காக்கவேண்டும் போல...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--