2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

விபத்தில் இருவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பிரியந்த ஹேவகே, ரொமேஸ் மதுசங்க


யாழ். பளைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் ஆண்கள் இருவர் மரணமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த  தனியார் பஸ் வண்டி ஒன்றின் இயந்திரம் இடைவழியில் பழுந்தடைந்த நிலையில், குறித்த பஸ் வண்டி பளைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டது.  இவ்வாறு நிறுத்திவைக்கப்பட்ட பஸ் வண்டியுடன் வேகமாக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்தில் ஒருவர் மரணமடைந்துள்ள அதேவேளை, மற்;றையவர் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு மரணமடைந்துள்ளார். 

இந்த விபத்து தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--