2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

விடுதி ஜன்னல் மீது கல் வீசிய பெண் கைது

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
யாழ். போதனா வைத்தியசாலை 30ஆம் விடுதியின் கண்ணாடி ஜன்னலுக்கு கல் எறிந்த பெண், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
நேற்று வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற இச்சம்பவம் மேலும் பற்றி தெரியவருவதாவது,
 
யாழ். போதனா வைத்தியாசாலையின் விடுதிகளில் உணவு பண்டங்களை விற்பனை செய்யும் மேற்படி பெண்ணை விற்பனையில் ஈடுபட அனுமதிக்க வேண்டாமென வைத்தியசாலை நிர்வாகம், பாதுகாப்பு ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. 
 
விற்பனையில் ஈடுபடும் பெண் நேற்று உணவுப் பண்டங்களை விற்பனை செய்வதற்காக வந்தவேளை வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த மேற்படி பெண், வைத்தியசாலையின் 30ஆம் விடுதியின் ஜன்னல் கண்ணாடிகள் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
 
தாக்குதல் நடத்திய பெண்ணை பிடித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன், முறைப்பாடும் பதிவு செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--