2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பஸ் தீக்கிரை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜுட் சமந்த


யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. வெள்ளவத்தையிலிருந்து சென்ற அதிசொகுசு தனியார் பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பே கலஹிடியாவ 67 ஆம் வளைவில் வைத்தே குறித்த பஸ்  நேற்று சனிக்கிழமை இரவு தீக்கிரையாகியுள்ளது.

தீ அனர்த்தம் ஏற்படும் போது குறித்த பஸ்ஸில் 25 பயணிகள் வரையில் இருந்துள்ள போதிலும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .