2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'2013 இல் காங்கேசன்துறையை யாழ் தேவி அடையும்'

Super User   / 2011 நவம்பர் 18 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ ஜயசேகர)

வடபகுதிக்கான யாழ் தேவி ரயில் 2013 ஆம் ஆண்டு காங்கேசன்துறையை அடையும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம இன்று தெரிவித்தார்.

பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதை இந்திய நிறுவனத்தினால் இன்னும் இருவருடங்களில் நிர்மாணிக்கப்பட்டவுடன் காங்கேசன்துறைக்கு யாழ் தேவி செல்லும் என அவர் கூறினார்.

பலாலிக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை ரயில்வே திணைக்களத்துக்கும் இந்தியாவின் இர்கோன் நிறுவனத்துக்கும் இடையில் கொழும்பில்  இன்று கையெழுத்திடப்பட்டது.
அமைச்சர் வெல்கம மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா ஆகியோரும் இவ்பைவத்தில் பங்குபற்றினர்.

56 கிலோமீற்றர் நீளமான இந்த ரயில் பாதை 149 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்திய கடனுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இவ்வைபவத்தில் இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே காந்தா, உரையாற்றுகையில், வடபகுதி ரயில் நிர்மாணப்பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறினார். இலங்கையின் அபிவிருத்தியில் முக்கிய பங்குவகிக்கும் இந்தியா, இலங்கையில் ஏராளமான அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.

106 கிலோமீற்றர் நீளமான மதவாச்சி – தலைமன்னார் ரயில் பாதை மற்றும் 90 கிலோமீற்றர் நீளமான ஓமந்தை –பளை ரயில் பாதை ஆகியனவும் இவற்றில் அடங்கும் என அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0

  • Ramesh Friday, 18 November 2011 09:29 PM

    யாழ் தேவி முதலில் எப்போது யாழ்ப்பாணத்தை அடையும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X