2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

தொலைபேசிகளை திருடிய மூவர் கைது

Kogilavani   / 2014 மார்ச் 24 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மல்லாகம் சந்தியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவரை ஞாயிற்றுக்கிழமை (23) யாழ். பொலிஸார் கைதுசெய்து தங்களிடம் ஒப்படைத்ததாக தெல்லிப்பளை பொலிஸார் திங்கட்கிழமை (24) தெரிவித்தனர்.

யாழ்.கட்டுவானைச் சேர்ந்த 20 வயதுடைய இருவரும்; 23 வயதுடைய ஒருவருமே இவ்வாறு  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்.நகரில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் கைத்தொலைபேசிகளை விற்பதற்காக மேற்படி மூவரும் சென்றுள்ளனர்.

குறித்த நபர்கள் மீது சந்தேகப்பட்ட நிலையத்தின் உரிமையாளர் இதுதொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

யாழ்.பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று குறித்த நபர்களைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்ட போது, மல்லாகம் சந்தியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் திருடப்பட்ட கைத்தொலைபேசிகளையே இவ்வாறு விற்பனை செய்யக் கொண்டு வந்தமை தெரியவந்தது.

யாழ்.பொலிஸாரினால் மேற்படி மூன்று நபர்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுத்தவுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .