2025 ஜூலை 05, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் மரணம்

Freelancer   / 2025 ஜூலை 05 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை, குருமட பிரதேசத்தில் இரு நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அதில் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 35 வயது ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மரண வீடொன்றில் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட குடும்பத் தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலில் காயமடைந்த மற்றைய நபர் தற்போது மஹியங்கனை வைத்தியசாலையில்   சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .