2021 மார்ச் 08, திங்கட்கிழமை

பனை மரங்களை ஏற்றிச்சென்ற இருவருக்கு பிணை

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

சட்டவிரோதமாக பனை மரங்களை ஏற்றிச் சென்ற இருவரையும் தலா 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டார்.

சட்டவிரோதமாக பனை மரங்களை டிப்பர் ரக வாகனத்தில் ஏற்றிச்செல்வதாக திங்கட்கிழமை (24) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த டிப்பர் ரக வாகனத்தையும் அதில் வந்த இரு நபர்களையும் மீசாலை பகுதியில் வைத்து கைதுசெய்ததாக கொடிகாமப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை செவ்வாய்க்கிழமை (25) மாலை சாவகச்சேரி நீதவான் நீதமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே, நீதவான் இவ்வாறு உத்தரவினைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .