2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

மலேசிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வரவேற்பு

Kogilavani   / 2014 மார்ச் 26 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இலங்கை முழுவதும் மோட்டார் சைக்கிள் சவாரியில் ஈடுபட்டு வருகின்ற மலேசியாவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் 9 பேர் நாளை வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணத்திற்கு வந்தடையவுள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் நிகழ்வு துரையப்பா விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஊடக பிரிவு அதிகாரி  மேஜர் எம். ஏ. ஆர். எஸ்.கே மல்லவ ஆராய்ச்சி, புதன்கிழமை  (26) தெரிவித்தார்.

1200 சிசி மற்றும் 1600 சிசி வலு கொண்ட டி - 6 ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் (Discovering Sri Lanka Friend Ship Ride - 2014) இவர்கள் நாளை வியாழக்கிழமை (27) காலை 9 மணிக்கு திருகோணமலையில் இருந்து புறப்பட்டு புல்மோட்டை அரச மரத்தடி சந்தி, வவுனியா ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .