2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

உழவு இயந்திரம் குடை சாய்வு: சிறுவன் படுகாயம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

யாழ். பண்டத்தரிப்புச் சந்தியின் சுற்றிவளையில் உழவு இயந்திரமொன்று குடைசாய்ந்ததில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாமயடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (08) தெரிவித்தனர்.

இதேவேளை, மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் பண்டத்தரிப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பறாளாய் விநாயகர் ஆலயத்திற்கு திங்கட்கிழமை (7) தூக்குக் காவடி எடுத்துச் சென்று திரும்பிய உழவு இயந்திரமே இவ்வாறு பண்டத்தரிப்புச் சந்தியின் சுற்றுவளைவில் திரும்பும் வேளையில் குடைசாய்நதுள்ளது.

உழவு இயந்திரத்தின் பின்பக்கப் பெட்டி சரிந்ததினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X