2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ரி.ஐ.டி.யினால் ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்

பருத்தித்துறையினைச் சேர்ந்தவரும் புனர்வாழ்வு பெற்றவருமான பத்திரிநாதன் அலன்மன்ரோ (30) என்பவர் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (8) தெரிவித்தனர்.

இவர், யாழ்.பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு கைதுசெய்யப்பட்ட ஐந்து மீனவர்களைவிட மேலதிகமாகத் தேடப்பட்டு வந்த நபரென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கிளிநொச்சிக்குச் சென்றுகொண்டிருக்கையில் கைதுசெய்யப்பட்டதாகவும் இவரையும் வவுனியாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் ஞாயிற்றுக்கிழமை  (6) இரவு பருத்தித்துறையைச்; சேர்ந்த 5  மீனவர்களை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவிற்குக் கொண்டுசென்றனர்.

பத்திரிநாதன் ரெஜினோல்ட் (வயது 47), பத்திரிநாதன் வின்சன் பெனடிக் (வயது 38), செல்வராசா அன்ரன் இருதயராசா (வயது 32), அழகநாதன் வின்சன் மரியதாஸ் (வயது 45), நாகப்பு மிக்கல்பிள்ளை (வயது 53) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அவுஸ்திரேலியாவிலுள்ள புலி உறுப்பினர்களிடம் நிதியினைப் பெற்று பல நாட்கலம் ஒன்றினை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே  குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன், மேலும் ஒரு மீனவரையும்  தேடி வருவதாகவும்; பொலிஸார் கூறியிருந்த நிலையிலே மேற்படி நபர்   (07) கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X