2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நா.நவரத்தினராசா 

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா  புதன்கிழமை (09) தெரிவித்தார்.

இந்த நியமனத்தின்படி, பன்னாலை வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஸ்டீபன் றெக்ஸ்ஸும், ஆனைக்கோட்டை குணபால வித்தியாலயத்திற்கு திருமதி அம்பிகை சிவஞானமும், சுதுமலை சின்மயபாரதி வித்தியாலயத்திற்கு எ.பேரின்பநாயகமும், அளவெட்;டி அருணாச்சலம் வித்தியாலயத்திற்கு ஆ.குமரகுருபரனும் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிபர் நியமனங்கள் கடந்த திங்கட்கிழமை (7) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமனங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--