2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கசிப்பு விற்ற தம்பதியர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.மீசாலைப் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட கணவன் மனைவி இருவரையும் கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தனர்.

அந்த பகுதியில் கசிப்பு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு வியாழக்கிழமை கசிப்பு வாங்குபவர்கள் போலச் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு கசிப்பு கொடுத்த வேளையில் அவர்களை கையும் மெய்யுமாகப் பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இருவருக்கும் எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X