2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

மரணமடைந்ததாகக் கூறப்படும் பெண் கொலை

Editorial   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூக்கத்தில் மரணமடைந்ததாகக் கூறப்படும் ஒரு பிள்ளையின் தாயின் பிரேத பரிசோதனையில், அவரது மரணம் ஒரு கொலை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மரணம் தொடர்பில் சாட்சியமளிக்க வந்த இறந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் 34 வயதானவர். அவர் ஒரு பிள்ளையின்  தாயார், அவர் தித்தவெல்கொல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர் கலேவெல வலயக் கல்வி அலுவலகத்தில் மேலாண்மை சேவை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த 13 ஆம் திகதி தம்புள்ள, தித்தவெல்கொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறையில் ஒரு பெண் தூக்கத்தில் இறந்துவிட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

தனது மனைவி தேர்வுக்காக படித்துவிட்டு மாலை 4.00 மணியளவில் படுக்கைக்குச் சென்றதாகவும், இரவு 9 மணியளவில் அவரை எழுப்புமாறு தெரிவிக்கப்பட்டதாகவும் அவரது கணவர் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இரவில் தனது மனைவியை எழுப்பச் சென்றதாகவும், ஆனால் அவள் எழுந்திருக்காததால், அவளுக்கு உடல்நிலை சரியில்லை என்று நினைத்து 1990 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்ததாகவும் அவர் பொலிஸாரிடம் அப்பெண்ணின் கணவன் கூறியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .