2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சங்கிலி அறுக்க முற்பட்ட சம்பவம்; ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். பண்டத்தரிப்பின் வடலியடைப்பு பகுதியில் மூதாட்டியொருவரின் தங்கச்சங்கிலியை அறுப்பதற்கு முற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  மூவர் உட்பட 05  பேரை கோப்பாய் பகுதியில் திங்கட்கிழமை (14) கைதுசெய்ததாக இளவாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்தே இவர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

வடலியடைப்பு பகுதிக்கு மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இம்மூவரும் வீதியில் சென்றுகொண்டிருந்த இம்மூதாட்டியின்  சங்கிலியை அறுப்பதற்கு முற்பட்டனர். எனினும், மூதாட்டி போராடி தனது சங்கிலியை அறுப்பதற்கு விடவில்லை.

இந்நிலையில், அவ்விடத்திற்கு பொதுமக்கள் வருவதைக் கண்ட இம்மூவரும் அங்கிருந்து தப்பியோடினர்.  இதன்போது,  அங்கிருந்த ஒருவர் குறித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை பதிவு செய்ததுடன்,  இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, விசாரணைகளை  மேற்கொண்டு சங்கிலி அறுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் உட்பட மேலும் இருவருமாக மொத்தமாக 05 பேரை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .