2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஓய்வுபெறும் வயதுடைய அரச உத்தியோகத்தர்களுக்கு செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன் 

ஓய்வுபெறும் வயதை அண்மிக்கும் அரசாங்க  உத்தியோகத்தர்களுக்கு சமூக சேவைகள் அமைச்சினால் செயலமர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  சமூக சேவைகள் அமைச்சின் முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் சுவிந்த எஸ்.சிங்கப்புலி தெரிவித்தார்.

இதற்காக 25 மாவட்டங்களிலுமுள்ள மாவட்டச் செயலர்களுக்கு தலா 60,000 ரூபா படி  நிதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிதியை  பிரதேச செயலகங்களுக்கு மாவட்டச் செயலர்கள் பகிர்ந்தளித்து செயலமர்வை நடத்தவுள்ளனர்.

தங்கள் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்கள், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு அலுவலர்கள் ஊடாக இச்செயலமர்வை நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரச உத்தியோகத்தர்கள் ஓய்வுபெற்ற பின்னர் பலவித உளப் பாதிப்புக்களை எதிர்நோக்கி நோய் வாய்ப்படும் நிலைக்கு உள்ளாகின்றனர். இதனால், நாட்டின் முதியோர் சனத்தொகை ஆரோக்கியமற்ற நிலையை அடைந்துள்ளது.

இவ்வாறான பல நிலைகளை தடுக்கும் நோக்குடன் இச்செயலமர்வுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்   அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--