2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

புதிதாக நியமனம் பெற்ற கிராம அலுவலர்களுக்கு செயலமர்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்

சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் கீழ் புதிதாக நியமனம் பெற்ற கிராம அலுவலர்களுக்கு 'நகராட்சி மன்றங்களின் செயற்பாடுகள்' என்ற தொனிப் பொருளில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை இன்று வியாழக்கிழமை(17) சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சி பட்டறையினை சாவகச்சேரி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்ததுடன், சாவகச்சேரி நகராட்சிமன்றத் தலைவர் இ.தேவசகாயம்பிள்ளை தலைமை தாங்கினார்.

இந்த செயலமர்வில் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் புதிதாக நியமனம் பெற்ற 18 கிராம அலுவலர்கள் பங்குபற்றினர்.

மேலும் இவ்வாறான செயலமர்வுகள் யாழ்.மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற 129 கிராம அலுவலர்களிற்கும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .