2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சங்கிலித் திருடனுக்கு காயம்: பெண் வைத்தியசாலையில்

Kogilavani   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.இணுவில் பகுதியில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுக்க முற்பட்ட திருடனொருவன் பிடிப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்தில் பெண் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் வெள்ளிக்கிழமை  (18) தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பெண் மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்தபோது குறித்த திருடன் அப்பெண்ணை திருட்டு மோட்டார் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்துள்ளதுடன் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் திருடன் பிடிபட்டதுடன், பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளான தருணத்தில் அங்கு கூடிய பொதுமக்கள் படுகாயமடைந்த பெண்ணினை வைத்தியசாலையில் சேர்த்ததுடன், குறித்த திருடனைப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--