2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

காரைநகர் பிரதேசத்தில் விழிப்புக் குழுக்களை மறுசீரமைப்பதற்கு பொலிஸாருக்கு டக்ளஸ் பணிப்புரை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


விழிப்புக்குழுக்களை மறுசீரமைத்து செயலூக்கம் கொண்டதாக மாற்றியமைக்கப்படும் போதுதான் சமூகவிரோத செயல்களுக்கு தீர்வு காண முடியுமென காரைநகர் ஆலடிப் பகுதியில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

எமக்கு மக்களின் ஆதரவும் பலமும் எவ்வளவு கிடைக்கப் பெறுகின்றதோ அதற்கு அமைவாக மக்களின் வாழ்வாதாரத்தை மட்டுமல்லாது அவர்கள் வாழும் பகுதிகளையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்ப முடியும்.
எமது இணக்க அரசியல் ஊடாக நாம் பல்வேறுபட்ட அபிவிருத்திகளை யாழ்.மாவட்டத்தில் மட்டுமல்லாது வடபகுதியிலும் முன்னெடுக்க முடிந்துள்ளது.

அமைதி வழியிலும் இணக்க அரசியல் ஊடாகவுமே எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க முடியுமென்பதுடன், மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இந்நிலையில், இன்றுள்ள அமைதிச் சூழலை குழப்பும் வகையிலும், மக்கள் மத்தியில் பதற்ற நிலையை ஏற்படுத்தும் வகையிலும் சுயலாப அரசியல்வாதிகள் சில தமிழ்ப் பத்திரிகைகளும் திட்டமிட்ட வகையிலும் செயற்பட்டு வரும் நிலையில் மக்கள் இவ்விடயம் தொடர்பில் உண்மை நிலவரங்களை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்ப்பரசியல் பேசி வட மாகாண சபையை கைப்பற்றியவர்களால் கடந்த ஆறுமாதங்களாக எவ்விதமான அபிவிருத்திகளையும் மக்களின் வாழ்வதாரத்திற்கான செயற்திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலையே காணப்படுகின்றது என சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், ஒரு சமூகத்தில் இடம்பெறும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அங்கு அமைக்கப்பட்ட விழிப்புக்குழுக்களை மறுசீரமைத்து செயலூக்கம் கொண்டவையாக மாற்றியமைப்பதன் ஊடாகவே அது சாத்தியமாகுமென்று தெரிவித்த அமைச்சர் அவர்கள் குறித்த விடயத்தில் விழிப்புக் குழுக்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்குமாறும் பொலிசாருக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலின் போது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அடுத்த மாதம் முதல்வாரத்தில் நடைபெறவுள்ள காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .