2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சி.வி.கே.சிவஞானம் இராஜினாமா

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக கடந்த 17 வருடங்களாக வகித்துவந்த பதவியை வியாழக்கிழமை (17)  இராஜினாமாச் செய்துள்ளார்.

வடமாகாண சபையின் செயற்பாடுகள், சமூக மற்றும் அரசியல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் மேற்படி பதவியை இராஜினாமாச் செய்வதாக சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இந்த நிலையமானது நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மற்றும் வசதி குறைந்த சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து  உதவிகளை பெற்று பல திட்டங்களை செயல்படுத்தி வந்தது.

இது இவ்வாறிருக்க, யாழ்.  மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் தலைவராகவும் சி.வி.கே.சிவஞானம் பதவி வகித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--