2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

நெல்லி பிடுங்க மரம் ஏறிய சிறுவன் படுகாயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

அளவெட்டி முத்துமாரியம்மன் கோவிலடியினைச் சேர்ந்த இராசதுரை ஜெனோதரன் (14) என்ற சிறுவன் நெல்லிமரத்தில் ஏறி மரத்திலிருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து சனிக்கிழமை (19) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் தமிழ் கந்தையா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

தனது வீட்டிலுள்ள மரத்திலேறி நெல்லி பிடுங்கிய போது தவறி வீழ்ந்த மேற்படி சிறுவன் படுகாயமடைந்த நிலையில் முதலில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--