2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வாள்வெட்டிற்கு இலக்கானவர் கொழும்புக்கு மாற்றம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து சனிக்கிழமை (19) நள்ளிரவு வாள்வெட்டுக்கு இலக்கான தவனேஸ்வரன் நிருபன் (30) என்பவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று (20) மாற்றப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (19) நள்ளிரவு இந்த இளைஞர் வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இந்த வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த மேற்படி நபர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தோடர்புடைய எவரும் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லையென தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மல்லாகம் பகுதியில் அதேதினத்தில் மூன்று இளைஞர் மீது முகத்தினை துணியினால் மூடிக்கொண்டு வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த மூன்று இளைஞர்களும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பழை பொலிஸாரும் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் இணைந்து சித்திரைப் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை  மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை  (19) நடத்தியது.

இதன்போது,  இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே இத்தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமென்று தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X