2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கர்ப்பிணியை தாக்கியவர்கள் பிணையில் விடுவிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

கொடிகாமம் பாலாவி பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கிய அவரது கணவன் மற்றும் மாமியாரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரபிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார். 

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை மீண்டும் திங்கட்கிழமை (21) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

குறித்த நிறைமாதக் கர்ப்பிணியை கடந்த திங்கட்கிழமை (14) மேற்படி இருவரும் தாக்கியதில் அவர் காயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் படி குறித்த தாக்குதல் சம்பவத்துடன், தொடர்புடைய பெண்ணின் கணவனும் மாமியாரும் கொடிகாமம் பொலிஸாரினால் செவ்வாய்கிழமை (15) கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் இன்று (21) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு உறவுகள் யாரும் இல்லாத நிலையில் தனது பிரசவத்திற்காக தனது கணவர் மற்றும் மாமியாரினை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி புரியும்படி வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--