2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் குழப்பம் விளைவித்தவர்களுக்கு தண்டம்

Super User   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்.மிருசுவில் உசன் பகுதியில் மதுபோதையில் வீதியில் நின்று குழப்பம் விளைவித்த 9 பேருக்கும் தலா 3000 ரூபா அபராதம் விதித்து சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (23) உத்தரவிட்டார்.

மிருசுவில், கொடிகாமம், பழையவாய்க்கால், மீசாலை, கிளிநொச்சி ஆகிய இடங்களினைச் சேர்ந்த மேற்படி 9 இளைஞர்;களும் உசன் பகுதியின் வீதியில் நின்றிருந்த பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை (22) இடையூறு விளைவித்துள்ளனர்.

இது தொடர்பாக கொடிகாமம் பொலிஸாரிற்குத் தெரியப்படுத்தியதை அடுத்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் 9 பேரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து புதன்கிழமை (23) சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--